எப்போதோ எடுத்த நிழற்படங்கள்
நீ இப்போது என்னோடு இல்லாத
நிஜத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம்
நிஜத்தில் உன் நினைவுகள் என் நிழலாய் என்றும்
என்னுடன் இருப்பதை ஏனோ மறுக்க முடிவதில்லை .....
கவிதைகளை ரசிக்க ஒரு வாழ்வும் வாழ்வை ரசிக்க சில கவிதைகளும்
Posted by A Budding Writer(!) at 3:44 AM Links to this post
Posted by A Budding Writer(!) at 2:43 AM Links to this post
நீ என்னோடு இருக்கின்ற நேரங்களில்
நிகழ்காலத்தில் வாழ்கிறேன்...
உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில்
வருங்காலத்தில் வாழ்கிறேன்...
உன்னைப் பார்த்துப் பேசி சென்றவுடன்
கடந்தகாலத்தில் வாழ்கிறேன்...
என் காலத்தை வென்ற
உன் நினைவுகள்......
Posted by A Budding Writer(!) at 10:31 PM 1 comments Links to this post
சலிப்பாகிப் போன சந்தோஷங்கள் ..
சங்கடமாகிப் போன சவுகரியங்கள்..
எரிச்சலாகிப் போன இயந்திர வாழ்வு..
ஏமாற்றமாகிப் போன கடந்த காலங்கள்...
கசப்பாகிப்போன காரியங்கள்...
கல்லறையாகிப்போன காதல்கள்...
நெருப்பாகிப் போன நிஜங்கள் ..
நெருடலாகிப் போன நித்திரைகள்....
துணிவை இழந்த தேடல்கள்..
தூக்கம் இழந்த தூரிகைகள்...
நிஜத்தை மறந்த நினைவுகள்...
நினைக்க மறந்த நிஜங்கள்....
வாழும் முரண்பாடுகள்..
நம் வாழ்வின் முரண்பாடுகள்....
Posted by A Budding Writer(!) at 3:37 AM 3 comments Links to this post
அருகருகே இருந்தும்
அதிகம் பேசிக் கொள்ளாமலே..
அடிக்கடி பேசிக் கொண்டாலும்
அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே..
விவரங்கள் தெரிந்திருந்தும்
விசாரித்துக் கொள்ளாமலே...
ஆறுதல்கள் தேவையிருந்தும்
ஆசைகள் கோடியிருந்தும்
நேரங்கள் நிறைய இருந்தும்
நேசத்தை சொல்லிக் கொள்ளாமலே
கடந்து கொண்டிருக்கும் நம் இயந்திர வாழ்வில்....
நம் உறவுகளின் பலங்களை...
நேசத்தின் நினைவுகளை..
ஆறுதல்களின் அவசியங்களை...
நட்பின் நிஜங்களை...
வெளிப்படுத்த உதவ ஒரு பொன்னாள்....
நீ பிறந்த நாள்......
Posted by A Budding Writer(!) at 12:05 AM 2 comments Links to this post
Labels: to my fren/ brother prabhu for his bday - 28th august
உன் மரணப் படுக்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்....
என்னை மன்னித்து விடு அன்பே....
நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுவேன்,,,
அடுத்த ஜென்மத்தில் உனக்கு மூத்தவனாய்
நான் பிறந்து காத்திருக்க வேண்டுமல்லவா? :)....
Posted by A Budding Writer(!) at 11:49 PM 3 comments Links to this post
நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்
உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...
ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்
உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...
ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்
உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்
அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட
உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........
ஆனால்,நானோ,
உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,
உன் முகம் பார்க்காத நாட்களிலும்,
உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,
உன் குரல் கேட்காத கனவுகளிலும்...
ஓவியனில்லா தூரிகையாய்...
சிற்பி தீண்டாத கற்களாய் ....
ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...
சிதறிக் கிடக்கும் சொற்களாய்....
தவிக்கிறேன்...............
Posted by A Budding Writer(!) at 11:34 PM 1 comments Links to this post
பூக்களும்... இசையும்... மழையும்...
வாழ்வின் இனிமையான தருணங்களில்
மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்....
துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்த்துவதிலும்
அதன் மகத்துவம் நிறைந்திருப்பதால் தான்
அதன் அருகாமையை மனம் என்றும் நாடுகிறது...
உனது அருகாமையைப் போலவே...
Posted by A Budding Writer(!) at 5:02 AM 1 comments Links to this post
எப்போ இந்த சீரியல் முடியும்?
எப்போ விளம்பரம் போடுவாங்க?
அம்மா எப்போ வருவாங்க?ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தாள்
விளம்பர மாடலின் மகள்....
தொலைக்காட்சியிலாவது
தன் தாயைப்பார்த்துக் கொண்டிருக்கலாமென்று. . .
Posted by A Budding Writer(!) at 4:44 AM 7 comments Links to this post
உலகின் மிக வலிய ஆயுதம்
அன்பென்பது உண்மை தான் ....
எதிர்பார்த்த இடத்தில்
எதிர்பார்த்த அன்பு
கிடைக்காத போது. .
அந்த அன்பை விட
மிக மோசமானதாய்த் தாக்கும் ஆயுதம்
இவ்வுலகில்
வேறொன்றும் ஈடானாதாய் இல்லை......
Posted by A Budding Writer(!) at 4:34 AM 0 comments Links to this post
அன்றாடம் நடக்கும் வகுப்புகளுக்க்காய்....
ஆசையாய் வாங்கும் திட்டுகளுக்காய்....
இம்சையாய்ப் புரட்டும் புத்தகங்களுக்காய்.....
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தேர்வுகளுக்காய்.....
உவகையோடு உறங்கிய பாட வேலைகளுக்காய்.....
ஊரோடு ஒத்து வாழ்ந்து மட்டமடித்த வகுப்புகளுக்க்காய்.....
எழுதியும் எழுதாமலும் பெற்று விட்ட அரியர்களுக்க்காய்....
ஏங்கிக் கிடந்த விடுதலைக்காய்......
ஐயங்கள் இல்லாத சந்தோஷத்துக்காய்.....
ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு -எங்கள்
ஓடிப் போன கல்லூரி வாழ்க்கையே .....
ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு !
Posted by A Budding Writer(!) at 1:53 AM 2 comments Links to this post
காதல் பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைவில் வந்தாய்
காதல் வசனங்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைக்க வைத்தாய்
காதல் ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல் கனவாய் வந்தாய்
அப்போது புரியவில்லை
காதலிக்க காரணம் தேவையில்லை என்று
இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்
அது காதல் இல்லை என்று
Posted by A Budding Writer(!) at 1:48 AM 5 comments Links to this post
நான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்
என் கவனம் சிதறி விட்டது
என்று திட்டும் என் தந்தையை
ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்
என்று?
என் கவனம்
உன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று??? :)
Posted by A Budding Writer(!) at 1:44 AM 0 comments Links to this post
உன் கூந்தலில் இருந்து பூ விழுந்தது
கையில் எடுத்து
முகர்ந்து பார்த்தேன்....
உன் கூந்தல் வாசம் ............
Posted by A Budding Writer(!) at 3:56 AM 0 comments Links to this post
உன் உயிரைப் பணயம் வைத்து
ஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்து
உன் உயிரிலே பாதியை செலுத்தி
என்னைப் பெற்றெடுத்து
இவ்வுலகிற்குஎன்னை ஈன்ற தாயே
கண்ணின் மணியாய்
உயிரின் உயிராய்
என்னை காத்து
காலமெல்லாம் என்னைநெஞ்சிலே சுமக்கிறாய் நீயே
உன் எல்லை இல்லா அன்புக்கும்
உன் முடிவில்லா சேவைக்கும் ஈடு செய்ய
இவ்வுலகில் இந்த ஜென்மத்தில் எதுவுமில்லை ஈடாக
தெய்வத் திடம் வேண்டுவேன்
மீண்டும் ஒரு ஜென்மம்
நான் உன் தாயாக.....
Posted by A Budding Writer(!) at 3:07 AM 1 comments Links to this post
சிரிக்க வைத்து அல்ல
அழ வைத்து எடுக்கும் புகைப்படம்
மேகத்தை அழ வைத்து வானம் எடுக்கும் மின்னல் படம்
Posted by A Budding Writer(!) at 4:10 AM 0 comments Links to this post