CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 28, 2010

நட்பாய் இருக்க மறப்பது.......

நல்லதொரு தோழியின் இதமான அன்பும் பதமான பண்பும்
மனதை நெகிழ்த்தும் போது
ஆருயிர் தோழியை வாழ்க்கைத் துணையாய் கொள்ள
ஏக்கம் கொள்வது ஆணின் மனம் .....

இதுவே...

நல்லதொரு தோழனின் நிபந்தனை இல்லாஅன்பும்
களங்கமில்லா பண்பும் மனதை நெகிழ்த்தும் போது
வாழும் காலம்தோறும் நட்பு நீடிக்க
ஏக்கம் கொள்வது பெண்ணின் மனம் .........

என்ன செய்ய ...
எல்லா தோழியும் நல்ல மனைவியாய் மாறும் அளவுக்கு
எல்லா நண்பனும் நல்ல கணவனாய் மாறுவதில்லையே.....

நட்பின் வாசல் வழியே நுழைந்தாலும் - ஆண்கள்
காதல் கோட்டை கட்டுவதென்னவோ ,
நட்பின் கல்லறையின் மேல் தான்...

நல்ல கணவன் நல்ல நண்பனாய் இலலாதபோது
வருகின்ற வருத்தத்தை விட
நல்ல நண்பன் கணவனான பின்
நட்பாய் இருக்க மறப்பது மிகப் பெரிய ஏமாற்றமே ....