சில நேரங்களில் கொஞ்சிப் பேசுவதும்
சில நேரங்களில் மிஞ்சி விடுவதும்
மனிதனின் இயல்பு தான்...
எப்பொழுது கொஞ்சுகிறான் எப்பொழுது மிஞ்சுகிறான்
என்பதிலே தான் அன்பின் சூட்சுமம் இருக்கிறது ...
நீ மிஞ்சும் போது உன்னைக் கொஞ்சி
நீ கொஞ்சும் போது உன்னை மிஞ்சி நிற்கிறவன்
உன் குணமறிந்து மனம் உணர்ந்தவன்...
அவன் மிஞ்சும் போதெல்லாம் நீ கொஞ்ச வேண்டுமென்றும்
அவன் கொஞ்சும்போது வேண்டுமானால் நீ மிஞ்சலாம் என்கிறவன்
உன் மனமும் உணராது
உன் குணமும் அறியாது
அவனைப் புரிந்து கொள்ளாதவள் என
உன்னை வைது வைப்பான்....
எப்பொழுதாவது மிஞ்சி நிற்கும் போது
கொஞ்சலில் கொட்டிய அன்பு காத்து நிற்கும் வரை கலக்கமில்லை....
இதுவே
எப்பொழுதாவது கொஞ்சி வரும்போதும்
எப்பொழுதோ மிஞ்சிய வேதனை
நெஞ்சைச் சுடுகிற தென்றால் ..
விழித்துக் கொள்ளடி பெண்ணே....
அன்பென்னும் இதம் தாண்டி
உறவு சுடுகிறதென்று
விழித்துக் கொள்ளடி பெண்ணே...